Archive for EnThamizh

யாரிவள்?

தீயின் மனமும் நீரின் குணமும்
தெளித்துச் செய்தவள் நீ நீயா ?

தெரிந்தப் பக்கம் தேவதையாக
தெரியாப் பக்கம் பேய் பேயா ?

நேரம் தின்றாய் நினைவைத் தின்றாய்
என்னைத் தின்றாய் பிழையில்லையா ?

வேலைவெட்டி இல்லாப் பெண்ணே
வீட்டில் உனக்கு உணவில்லையா ?

கண்ணீர் உனக்கு ஊற்று போல,
கசப்பாயினும் கொடுத்தாய், எனக்கு தாகமென்று,
உபசரிப்பு களிப்பில் பருகினேன், கரிந்ததும் கழித்தேன்.

கேள்விகேட்டு உன்னை கேலி செய்யேன்,
இப்படி மேற்கோள் காட்டி, மறைகிறேன்.

உப்பைச் சாப்பிட்டதற்கு எங்கே தண்ணீர்?


பி.கு: வரிகள் இவ்வழி.

Comments

பொங்கல் பத்தின பொங்கல்

தலை: தந்தனத்தோம் என்று சொல்லியே! வில்லினில் பாட! ஆமா! வில்லினில் பாட… வந்திருக்கேன் உங்க வெறும் பயலே! ஏஏ! அதாகப்பட்டது… இன்னைக்கு பொங்கல் பண்டிகை!

வால்: ஆமா! அதா தெரியுமில்ல!

தலை: அட சொல்லவிடுங்கப்பா! இன்னைக்கு பொங்கலுங்கறதுனால நம்ம விவசாயிகளுக்கு நன்றி சொல்லிடுவோம்!

வால்: சரி நன்றி! நன்றி! பின்ன?

தலை: பின்ன, என்ன பின்ன? நொன்ன! பாட்டப் போடுங்கய்யா!

வால்: தை தை தை தை, தக்கத்த தை தை தை தை!

தலை: ஏய்! நிறுத்து நிறுத்து! அட நிறுத்துப்பா! என்னன தக்கதிமிதை?

வால்: இது தை பண்டிகையா போச்சு! அதான்…

தலை: வந்து சேந்துருக்கானுங்க பாரு! நான் பாடுறேன், கொஞ்சம் சுருதி சேருங்கப்பா!

ஏ! வந்தது! வந்தது! பொங்கல் வந்தது!
வந்தேனே! வந்தேனே! உங்கள வாழ்த்த வந்தேனே!
தின்னகு திந்தோம்! தின்னகு திந்தோம்! (chorus)

——–

Update #1: பாட்டு வேணா! உரைநடையா வைச்சுகிறுவோம். பசங்க commentla திட்டரமாதிரி இருக்கு. இதப் படிங்க:

ஊரு பூரா கோலமிட்டா! புத்தம் புது துணிய போட்டா!
புது அரிசி சட்டிக்குள்ளே! அது முற்றத்திலுள்ள அடுப்பின் மேலே!
வாழை இலை plate போட்டு! பல item படைச்சுருக்கா!

ஏ! வந்தது! வந்தது! பொங்கல் வந்தது!
வந்தேனே! வந்தேனே! உங்கள வாழ்த்த வந்தேனே!

புது மஞ்சளும் பெருங்கரும்பும்! நேற்று பறித்த காய்கறியும்!
குடும்பத்திலுள்ள அனைவரும்; சேர்ந்து சமைக்க readya நின்னா!

பத்த வச்சா, அடுப்ப பொண்ணு! Bubble Bubblea steam வந்திச்சி!
பொங்குது பொங்குது தானா பொங்குது!
ஏ! பொங்குச்சு பொங்குச்சு வளிய பொங்குச்சு!
ஏ! பொங்கிடுச்சு பொங்கிடுச்சு வெளியே பொங்கிடுச்சு!

ஏ! சொல்லுடா பய்யா “பொங்கலோ! பொங்கல்!”
பொங்கலோ! பொங்கல்! பொங்கலோ! பொங்கல்!

ஏ! வந்துச்சு! வந்துச்சு! வேனுங்கறது வந்துச்சு!
வந்தோமே! வந்தோமே! பொங்கல் சாப்பிட! >:O)

——–

அறுவடைக்கு பின் விதைப்பு! உழுதிடுக! நன்றாய் உழைத்திடுக!
விழுந்தவர் எழலாம்! வீழ்ந்தவர் தேரலாம்!
பிணி ஒன்றுமில்லை! ஆயின் பணி உண்டு!
தை பிறந்தது வாரீர்! வழி ஒன்றிருக்கும் பாரீர்!
அன்பர் அன்பிகளுக்கு, பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

Comments

Vaazhkai

வாழ்க்கை - எல்லாம் கையில், வாயில் அல்லவே!
வாயிலாயின் அது மளிகை, விழுங்கலாயிற்றே!
விழுவதென்றால் காலால் தான், கையினால் அல்ல!
உன் கையில், உன் வாழ்க்கை - கைவிடாதே!

கையினில்தானே உள்ளது கற்றதனைத்தும்? வாழ்க்கை உட்பட?
அட பின், கற்றதனைத்தும் கைம்மண்ணோ? - கழுவிவிடாதே!

வீழ்ந்தாலும் அடி, வாழ்ந்தாலும் அடி,
அடி மேல் அடியடித்து ஆனது யார் பொடி?
பொடியானதும் போடி என்பாயோ?
அல்ல, பொடி சொன்னதும் போய்விடுவாளோ?
வாழ்க்கை - எல்லாம் கையில், வாயில் அல்லவே!

Comments

பழைய பொங்கல்

தமிழ்பேசும் அன்பி/அன்பர்களுக்கு,

இப்புத்தாண்டில்
அனைத்து வளம் பெற்றிடுக,
அவற்றை பெருதிடுக,
வாழ்க்கையை சிறத்திடுக!

அனைவர்க்கு பொங்கள் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

மகிழ்சியுடன்,
இரஞ்சித்து.

பொங்கல் குலைந்து இருப்பதை பார்த்தீர்களா?

Comments

பயணம்

உயர் வாழ்வான உயிர் வாழ்க்கை - ஒரு பயணம்

நடத்தல், மிதித்தல், பறத்தல், மிதக்குதல் - ஆகா
பயணத்தில் தான் எத்துனை வகை;
போதாக்குறைக்கு எவரோ ஈர்தார்போல்
காந்த அலைகளாம் நம் சிந்தனை - சிதற்பயணம்.

மனம் இருந்தால் பயணம்,
அன்பு இருந்தால் பயணம்,
குணம் இருந்தால் பயணம்,
பணம் இருந்தால் பயணம்.

அட! பிணம் கூட பயணக்கிறது;
தேரிலோ மற்றவர் தோளிலோ.
படிந்து மடிந்து முற்றாலும் பயணம்;
பயணங்கள் முடிவதேயில்லை.

காரணம்: நேற்று நனைந்த “பெய்யெனப் பெய்யும் மழை”

iiii to view text properly, set your page to utf-8 character encoding (provided you have support for Tamil) iiii

Comments